"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன் அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)

Wednesday, 18 September 2013

4 இடங்களில் மெகாஃபோன் பிரச்சாரம்

நெல்லை மாவட்டம் கே.டி.சி நகர் கிளை சார்பாக கடந்த 15-09-2013 அன்று 4 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. தொழுகையின் முக்கியத்துவம், நரகத்தின் தன்மைகள், இணைவைப்பு, இஸ்லாம் கூறும் கடவுள் கோட்பாடு ஆகிய தலைப்புகளின் கீழ உரையாற்றப்பட்டது. பொதுமக்கள் பலர் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்!

மாற்று மத தாவா!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில் 07-09-13 அன்று, 

*முஸ்லிமல்லாத மாற்று மத சகோதரரா நீங்கள்?
*இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்து கொள்ள விருப்பமா?
*குர்ஆனை படித்துப் பார்க்க ஆர்வமா?
*இஸ்லாமிய நூல்களை இலவசமாக பெற வேண்டுமா?
எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் விளம்பர பேனர்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சமுதாயப் பணிகள் மற்றும் சேவை நிறுவனங்கள் சம்பந்தமாக விளம்பர பேனர் கடந்த ரமளான் மாதம் கே.டி.சி நகரில் வைக்கப்பட்டது.

கே.டி.சி.நகரில் ரமலான் இரவுத் தொழுகை 2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 2013 ரமலான் மாதம் முழுவதும் இரவுத் தொழுகை மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஆண்களும், பெண்களும் பலர் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்!