"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன் அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)

Wednesday, 5 February 2014

சிறை செல்லும் போராட்டம் - நெல்லை மண்டலம்

நெல்லை, ஜனவரி 28 - கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு மத்தியில் 10% இட வழங்கக் கோரியும், மாநிலத்தில் 7% இட ஒதுக்கீடாக உயர்த்தித் தரக் கோரியும் நெல்லையில் மாபெரும் சிறை செல்லும் போராட்டம் நடைபெற்றது. 8 மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள், முதியோர்கள், குழந்தைகள் உட்பட 5 லட்சத்திர்க்கும் அதிகமான மக்கள் உரிமைக்காக அணி திரண்டனர்.
உயிரைக்கொடுத்தோம் உயிரைக் கொடுத்தோம்; விடுதலைக்காக உயிரைக் கொடுத்தோம்; விடுதலை பெற்ற பின்னாலே; வீதியில் நாங்கள் நிற்கின்றோம்”, “ராஜ்ஜியத்தை ஆண்ட நாங்கள்; பூஜ்ஜியமாய்க் கிடக்கின்றோம்; பூஜ்ஜியத்தை மாற்றச் சொல்லி; போராடவே வந்துள்ளோம்”, “மலர் மாலைகள் இனி வேண்டாம்; மணிமண்டபங்கள் இனி வேண்டாம்; வேண்டியதெல்லாம் இடஓதுக்கீடே!போன்ற கோசங்கள் விண்ணை முட்டியது. மாநில மேலாண்மை குழுத் தலைவர்  சகோ.ஷம்சுல்லுஹா ரஹ்மானி கண்டன உரியது ஆற்றினார்கள். “இட ஒதுக்கீடுக்காக 1999இல் இருந்து போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த சமுதாயம் நபிவழி நடக்கும் கட்டுக்கோப்பு மிக்க சமுதாயம். நாங்கள் மரங்களை வெட்டுவதில்லை. பஸ்களை எரிப்த்து கலவதரத்தை உண்டாக்குவதில்லை. அதற்காக எங்களை இளித்தவாய சமுதாயம் என்று எண்ணி காலம் தாழ்த்தினால், இன்ஷா அல்லாஹ் அரசியல்வாதிகளுக்கு தக்க பதிலடி காத்திருக்கிறது.” என்று அவர் கூற அதை ஆமோதிக்கும் விதமாக “அல்லாஹு அக்பர்” என்ற கோஷம் போராட்ட களத்தை அதிரச் செய்தது. லட்சக்கணக்கான மக்களை கைது செய்ய காவல்துறையிடம் போதிய வாகனங்கள் இல்லாததால் மக்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.
இப்போராட்டம் அனைத்து முஸ்லிம்களின் உரிமையை மீட்பதர்க்கான போரட்டமாதளால், தவ்ஹீத் ஜமாஅத்துடன் கருத்து மாறுபட்ட முஸ்லிம்களும் பலர் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தை வெற்றி பெறச் செய்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment